முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் 4 பவுன் தங்க நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்..!

கேரளாவில் 4 பவுன் தங்க நகையை விழுங்கிய வளர்ப்பு நாய்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வீட்டில் வளர்த்த நாய் சுமார் 1.30 லட்சம் மதிப்பில் உள்ள 4 பவுன் தங்க நகையை விழுங்கியுள்ளது.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள ஆண்டிமடத்தைச் சேர்ந்தவர் கேசவன். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அவரின் மனைவி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி மேஜை மேல் வைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மேஜையில் வைத்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் நகை கிடைக்கவில்லை. மேலும் வீட்டிற்குள் யாரும் வரவில்லை. இதனால் குழப்பமடைந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் வளர்த்த நாய் வீட்டில் அங்கும் இங்குமாக ஓடியுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்டு, நாயை குடும்பத்தினர் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாயைச் சோதித்து எக்ஸ்ரே எடுத்து பார்த்தலில், நாயின் வயிற்றில் தங்க நகை இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, நாயின் வயிற்றில் இருக்கும் நகையை எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் மருந்து மூலம் நகை எடுக்கக் கேட்டுள்ளனர்.

Also Read : 110 யூடியூப் சேனல்.. 248 வெப்சைட்... மத்திய அரசு தடை

அதனால் மருத்துவர் ஒரு மருந்தைக் கொடுத்து நாய்க்குக் கொடுக்க கூறியுள்ளார். மேலும் நாயை வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குடும்பத்தினர் நாய்க்கு மருந்தைக் கொடுத்துக் கவனித்து வந்த நிலையில் சுமார் 42 மணி நேரம் கழித்து நகை வெளியில் வந்துள்ளது.

First published:

Tags: Dog, Gold, Kerala