முகப்பு /செய்தி /இந்தியா / ”பிரதமர் மோடி மீதான இந்த பாசமே பாஜகவின் பலம்” - வீடியோ வெளியிட்டு அமித்ஷா பெருமிதம்!

”பிரதமர் மோடி மீதான இந்த பாசமே பாஜகவின் பலம்” - வீடியோ வெளியிட்டு அமித்ஷா பெருமிதம்!

அமித்ஷா

அமித்ஷா

பிரதமரின் உருவப்படம் மீது படிந்திருந்த மழை நீரைத் தொண்டர் ஒருவர் துடைக்கும் வீடியோவை அமித்ஷா பகிர்ந்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

பிரதமர் மோடி மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதுவே பாஜகவின் பலம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

மழையின் போது பிரதமரின் உருவப்படம் மீது படிந்திருந்த மழை நீரைத் தொண்டர் ஒருவர் துடைக்கும் வீடியோவை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமித்ஷா, பிரதமர் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Also Read : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் 19 சதவீதம் அதிகரிப்பு - காலாண்டு அறிக்கையில் தகவல்

top videos

    மேலும், பிரதமர் மோடி மீதான தன்னலமற்ற இந்த பாசமே பாஜகவின் பலம் எனவும் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

    First published:

    Tags: Amit Shah, Karnataka, PM Modi