மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முன்னணி கட்சிகள் இப்போதே திட்டமிடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள நவடா மாவட்டத்தின் ஹிசுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, "முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசின் கீழ் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பீகாரில் காட்டு ஆட்சி மீண்டும் திரும்பியுள்ளது.
நிதீஷ் குமாரை பாஜக பல முறை முதலமைச்சராக்கியுள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் பாஜகவிற்கு நிதீஷ் குமார் துரோகம் இழைத்துள்ளார். வெறும் அதிகாரத்திற்காக அவர் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். மீண்டும் 3ஆவது முறை மோடியை பிரதமராக்க மக்கள் தீர்மாணித்து விட்டனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலி - கேரளாவில் பயங்கரம்
பிரதமர் ஆக வேண்டும் என்ற நிதீஷ் குமாரின் கனவு பலிக்காது. விரைவில் பீகாரிலும் நிதீஷ் குமாரின் ஆட்சி கவிழும்" என்று தெரிவித்துள்ளார். தனது மகன் தேஜஸ்வி பீகாரின் முதல்வராக வருவார் என லாலு யாதவ் கனவு காண்கிறார். ஆனால், நிதீஷ் குமார் அதற்கு வழிவிடமாட்டார் என அமித் ஷா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Bihar, Nitish Kumar, PM Modi