முகப்பு /செய்தி /இந்தியா / நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மெடிக்கல் கடைக்காரர்.. ஷாக் சம்பவம்!

நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மெடிக்கல் கடைக்காரர்.. ஷாக் சம்பவம்!

அறுவை சிகிச்சை செய்த மெடிக்கல் ஷாப் ஓனர்

அறுவை சிகிச்சை செய்த மெடிக்கல் ஷாப் ஓனர்

மருந்து கடை நடத்தும் ஒருவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த நோயாளி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் உள்ள கேஜூரி என்ற பகுதியில் உள்ள ஜிகிர்சாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னா குப்தா. இவருக்கு ஹைட்ராசெல் பாதிப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. இதற்காக கெஜூரி பகுதியில் மெடிக்கல் கடை வைத்திருக்கும் ஏ ரஹ்மான் என்பவரிடம் மருந்துகள் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், முன்னா குப்பதா உடல் நலம் சீராக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிய மெடிக்கல் ஷாப் ஓனர் ரஹ்மான், தானே இந்த ஆப்பரேஷனை உங்களுக்கு செய்து வைக்கிறேன் என்றுள்ளார். எந்த பிரச்சனையும் வராத வகையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறேன் என அந்த நபர் கூறியதை நம்பி முன்னா குப்தாவும் அதற்கு சம்மதித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அன்று தனது மெடிக்கல் ஷாப்பில் வைத்து ரஹ்மான் நோயாளி முன்னா குப்தாவுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.  ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து அன்று மாலையே உடல் நிலை சீராகாமல் மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பிரசாதமாக வழங்கிய மதுபானத்தை வாங்க பாபா கோவிலில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு...

தொடர்ந்து முன்னா குப்தாவின் மகன் மருந்து கடை ஓனர் ரஹ்மான் மீது காவல்துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து சட்ட விதிகளை மீறி அறுவை சிகிச்சை செய்த ரஹ்மானை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல் ஆய்வாளர் பிந்தேஸ்வரி பாண்டே தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Crime News, Uttar pradesh