முகப்பு /செய்தி /இந்தியா / தன் பாலின திருமணம்... நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம்... உச்சநீதிமன்றம் கருத்து..!

தன் பாலின திருமணம்... நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம்... உச்சநீதிமன்றம் கருத்து..!

கோப்புப்படம்

கோப்புப்படம்

தன்பாலினத் திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

  • Last Updated :
  • Delhi, India

தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கோரிய வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, இது சமூகம் சார்ந்த பிரச்னை என்பதால், நாடாளுமன்றத்திடம் முடிவெடுக்கும் பொறுப்பை ஒப்படைக்குமாறு வாதிட்டார். மனுதாரர்களும் தங்கள் தரப்பு கோரிக்கை மற்றும் உரிமைகளை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

இந்நிலையில், நேற்று 6 ஆம் நாள் விசாரணையின் போது, தன்பாலினத் திருமணத்திற்கான அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், திருமணம் என்ற பெயரில் அல்லாமல், மாற்று வகையில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக சட்டமன்றத் தேர்தல்... திமுகவை ஃபாலோ செய்யும் காங்கிரஸ்..!

தன்பாலின தம்பதிகளுக்கு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவது, காப்பீடுகளில் துணைகளின் பெயர்களை சேர்த்தல் போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தன்பாலின திருமணங்களில் உள்ள பிரச்னைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் புதன்கிழமை பதில் அளிக்கும்படி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Delhi, Same-sex Marriage, Supreme court