முகப்பு /செய்தி /இந்தியா / தூக்கு தண்டனைக்கு மாற்று வழியைக் கண்டறிய நிபுணர் குழு... மத்திய அரசு தகவல்..!

தூக்கு தண்டனைக்கு மாற்று வழியைக் கண்டறிய நிபுணர் குழு... மத்திய அரசு தகவல்..!

தூக்குத் தண்டனை

தூக்குத் தண்டனை

இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு தண்டனை முறையை அமல்படுத்த ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தூக்குத் தண்டனைக்கு மாற்று வழியைக் கண்டறிய நிபுணர் குழு அமைக்க முடிவு செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தூக்கு தண்டனையை கைவிட உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல நாடுகளில் தூக்குத் தண்டனை கைவிடப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவிலும் தூக்கு தண்டனைக்கு மாற்றாக, வேறு தண்டனை முறையை அமல்படுத்த ஆய்வு செய்ய வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதையும் வாசிக்கவிவகாரத்து வழக்கிற்கு இனி 6 மாத கால காத்திருப்பு கட்டாயமில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், தூக்குத் தண்டனைக்கு மாற்று வழியைக் கண்டறிய நிபுணர் குழு அமைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். குழுவில் எந்தெந்த நிபுணர்களை உட்படுத்துவது என்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குகளை ஜூலை மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

top videos
    First published:

    Tags: Supreme court