முகப்பு /செய்தி /இந்தியா / எல்லையில் போதைப்பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்... சுட்டு வீழ்த்திய ராணுவம்- 3 கிலோ ஹெராயின் பறிமுதல்

எல்லையில் போதைப்பொருளுடன் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்... சுட்டு வீழ்த்திய ராணுவம்- 3 கிலோ ஹெராயின் பறிமுதல்

எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

பஞ்சாப் எல்லைப் பகுதியில் போதைப்பொருளுடன் ஊடுருவிய ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

  • Last Updated :
  • Punjab, India

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அருகே தானோ கலான் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் பாகிஸ்தானின் சர்வதேச எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்கு நேற்று இரவு 8.48 மணி அளவில் சந்தேகத்திற்கு உரிய முறையில் ஆளில்லா விமானமான ட்ரோன் பறந்து கொண்டிருந்தது.

இந்த ட்ரோன் சத்தம் கேட்டு எல்லை பாதுகாப்பு படையினர் உஷாராகி அதை இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். பின்னர் அது பாகிஸ்தானில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ட்ரோனா சோதனை செய்த போது அதில், மூன்று பாக்கெட் போதை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

அந்த பாக்கெட்டுகளை ஆய்வு செய்ததில் அது ஹெராயின் போதை பொருள் எனவும், பிடிபட்ட போதை பொருளின் எடை 3.3 கிலோ எனவும் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானின் சதிச் செயலை எல்லை பாதுகாப்பு படையினர் முறையடித்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்...!

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி ஊடுருவும் சம்பவங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் இதே போல 4 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பஞ்சாப் பகுதி எல்லை பாதுகாப்பு படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

top videos
    First published:

    Tags: Border Security Force, Drone, Punjab