முகப்பு /செய்தி /இந்தியா / குப்பை கொட்டுவதில் தகராறு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை... அதிர்ச்சி சம்பவம்..!

குப்பை கொட்டுவதில் தகராறு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை... அதிர்ச்சி சம்பவம்..!

பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

குப்பை கொட்டுவது தொடர்பாக இருந்து வந்த 10 ஆண்டுகால பகைக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

காலி நிலத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்திற்கு இடையே இருந்து வந்த நீண்ட நாள் பகை 6 உயிர்களை பலி வாங்கியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கஜேதந்திர சிங் மற்றும் தீர் சிங் என்ற இருவரின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த இருவரின் குடும்பத்திற்கும் இடையே 2013ஆம் ஆண்டில் காலி நிலத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக மோதல் வெடித்துள்ளது.

இந்த சண்டையில் கஜேந்தர் சிங் குடும்பத்தினர் தீர் சிங் குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கொலை செய்து கிராமத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில், கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், இரு குடும்பமும் சமரசம் பேசி வெளியே தீர்வு செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கஜேந்திர சிங் குடும்பத்தினர் மீண்டும் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்த சூழலில் தான் கஜேந்திர சிங் குடும்பத்தை திட்டமிட்டு பழிதீர்க்க தீர் சிங் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர். ஊர் திரும்பிய கஜேந்திர சிங் வீட்டை காலையிலேயே தீர் சிங் குடும்பம் சூழ்ந்து தகராறு செய்யத் தொடங்கினர். தொடர்ந்து தீர் சிங் குடும்பத்தார் தங்களிடம் இருந்து துப்பாக்கியால் கஜேந்திர சிங் குடும்பத்தாரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஹனி டிராப் வலை.. . பாக் ஏஜென்டுக்கு வீடியோ காலில் ரகசிய தகவல் - டிஆர்டிஓ விஞ்ஞானி கைது

இதில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும், இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை பதற்றத்தை தணிக்கும் விதமாக கிராமத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Murder