முகப்பு /செய்தி /இந்தியா / தூய்மை இந்தியா திட்டம்.. கிராமப்புறங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.. மத்திய அரசு தகவல்

தூய்மை இந்தியா திட்டம்.. கிராமப்புறங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.. மத்திய அரசு தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சக தகவல் தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தூய்மை இந்திய திட்டம் குறித்து மத்திய அரசு முக்கிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் கழிப்பறை என்ற நோக்கத்துடனும் தூய்மை இந்தியா இயக்கம் 2014, அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள், அடையப்பட்ட இலக்குகள் குறித்து மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாடேல் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது பதிலில் கூறியதாவது, "2019ஆம் ஆண்டு அக்டோபர் 2க்குள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்த இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் 10 கோடி தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

அனைத்து மாநிலங்களும் 2019அக்டோபர் 2ஆம் தேதி திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக தங்களது மாநிலத்தை அறிவித்தன. எனினும், விடுப்பட்ட வீடுகள் மற்றும் புதிய வீடுகளில் இத்திட்டத்தின் கீழ், கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், நடத்தை மாற்றம் தொடர்பான பிரச்சார இயக்கம், கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடங்களற்ற பகுதிகளாக இருப்பதை உறுதிசெய்தல், கிராமப்புறங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைக்காக வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் 2வது கட்டத்தின் கீழ், 92 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் இது வரை கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 கோடி கழிப்பறைகளும், 2.23 லட்சம் சமுதாய தூய்மை வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 2022-ல் பால், இறைச்சி, முட்டை உற்பத்தி அதிகரிப்பு: கால்நடை வளர்ப்பு புள்ளியியல் அறிக்கையில் தகவல்!

2022ஆம் ஆண்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 709 மாநிலங்களில் அமைந்துள்ள 17,559 கிராமங்களில் உள்ள 1,75,521 வீடுகளில் கிராமப்புற தூய்மைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 95.4 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளதும், அவற்றை அந்த வீடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது."  இவ்வாறு அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Swachh Bharat, Toilet