முகப்பு /செய்தி /இந்தியா / ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் TRP ரேட்டிங் மட்டுமே அதிகரிக்கும் – 2024-லும் மோடி ஆட்சிதான்’ - அமித் ஷா பேச்சு

‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் TRP ரேட்டிங் மட்டுமே அதிகரிக்கும் – 2024-லும் மோடி ஆட்சிதான்’ - அமித் ஷா பேச்சு

அமித் ஷா.

அமித் ஷா.

தேர்தல் களத்தில், அடிமட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மோடியின் இமேஜ் கிராமம் முதல் தலைநகர் டெல்லி வரை பாஜகவுக்கு பலம் சேர்த்து வருகிறது – அமித் ஷா

  • Last Updated :
  • Tamil Nadu, India

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் TRP எனப்படும் தொலைக்காட்சிகளுக்கான ரேட்டிங் பாயின்டுகள் தான் அதிகரிக்கும் என்றும் பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க்கு நடத்திவரும் தி ரைசிங் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது-

மோடிக்கு எதிராக சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைவதாக வைத்துக் கொள்வோம். உத்தரப்பிரதேசத்தில் சந்திரசேகர ராவ் பேரணி நடத்துவதால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? தெலங்கானாவில் மம்தா பானர்ஜி பேரணி நடத்துவதால் என்ன நிகழ்ந்துவிடும்? மேற்கு வங்கத்தில் அகிலேஷ் யாதவ் பொதுக்கூட்டம் நடத்தி மாற்றங்கள் ஏதும் வருமா? அந்த வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதால் எதுவுமே நடக்கப் போவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றவர்களை தலைவர்களாக கருதவில்லை.

கடந்த தேர்தலில் நாங்கள் மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று கூறினேன். இதனை யாரும் அப்போது நம்பவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் நாங்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஓடிஸா மற்றும் தெலுங்கானாவில் எங்களது எம்பி தொகுதிகள் அதிகரித்துள்ளன. தேர்தல் களத்தில், அடிமட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மோடியின் இமேஜ் கிராமம் முதல் தலைநகர் டெல்லி வரை பாஜகவுக்கு பலம் சேர்த்து வருகிறது. எதிர்க்கட்சிகள் இணைவதாலோ அல்லது அதுசார்ந்த பேச்சுக்களாலோ தொலைக்காட்சிகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் வேண்டுமானால் அதிகரிக்கலாம் 2024 பொதுத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: NEWS18 RISING INDIA