முகப்பு /செய்தி /இந்தியா / ராகுலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கருப்பு சட்டை போராட்டம்... முடங்கிய அவைகள்!

ராகுலுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கருப்பு சட்டை போராட்டம்... முடங்கிய அவைகள்!

கருப்பு உடையுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

கருப்பு உடையுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் காரணமாக இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியதில் இருந்தே, லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம், அதானி விவகாரம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் அவையில் அமளி செய்து வந்தன. இதனால் கடந்த வாரம் அவை நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கின.

இந்நிலையில், மோடி பெயர் சர்ச்சை தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்து இரண்டாண்டு தண்டனை தந்து தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெருவாரியா எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடையில் வருகை தந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதானி விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையை மாலை 4 மணி வரையிலும், மாநிலங்களவையை நண்பகல் 2 மணி வரையிலும் சபாநாயகர்கள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சாவர்கர் கடவுளை போன்றவர்.. அவரை அவமதிப்பதை பொறுக்க முடியாது.. ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

top videos

    தொடர்ந்து சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, டிஆர் பாலு உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள  காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்திக்கு ஆதரவு குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வருவதை பிரதமர் மோடிக்கு உணர்த்தவே கருப்பு உடைகளை தாங்கள் அணிந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Lok sabha, Parliament, Parliament Session, Protest, Rahul Gandhi