முகப்பு /செய்தி /இந்தியா / தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு மத்தியில் சித்தராமையா குடும்பத்தில் சோக நிகழ்வு

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு மத்தியில் சித்தராமையா குடும்பத்தில் சோக நிகழ்வு

சித்தராமையா

சித்தராமையா

கர்நாடகாத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வேளையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா வீட்டில் சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது.

மொத்தமுள்ள 224 இடங்களில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக 63 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற பரபரப்பு தொற்றியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும் மூத்த தலைவருமான சித்தராமையாவை மீண்டும் முதலமைச்சாரக நியமிக்க வேண்டும் என அவர் தரப்பு ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். அதேவேளை, மாநில காங்கிரஸ் தலைவரான டிகே சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்றும் அவர் தரப்பு ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.

கட்சி மேலிடம் தான் இறுதி முடிவை எடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், சித்தராமையாவுக்கு காங்கிரஸ் வெற்றியானது நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்த்த அதேவேளையில் அவரது குடும்பத்தில் இன்று சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சித்தராமையாவின் சகோதரி சிவம்மாவின் கணவர் ராமேகவுடா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் முடிவுகள்: சித்தராமையா மகன் கருத்துக்கு டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு, காங். அலுவலகத்தில் சலசலப்பு

top videos

    இன்று காலை திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மைசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இதனால் சித்தராமையாவின் வீட்டார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ராமே கவுடாவுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இன்று மாலையில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Karnataka, Karnataka Election 2023, Siddramaiah