2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி, பிரதமர் நரேந்திர மோடி பிரதமாரானார். மோடி பிரதமராக பதவியேற்று நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், அவருக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் 9 கேள்விகளை முன்வைத்துள்ளது.
டெல்லியில் உள்ள அகில இந்தியா காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது கட்சி சார்பில் உருவாக்கப்பட்ட 9 கேள்விகளை எடுத்துரைத்தார்.
1. நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையும் உயர்ந்து உச்சம் தொட்டு வருவது ஏன்? பணக்காரர்கள் ஏழைகள் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் சூழலில் பொதுச்சொத்துக்களை நண்பர்களிடம் விற்பனை செய்வது ஏன்?
2. கருப்பு சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்த போது விவசாயிகளிடம் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகாதது ஏன்.
3. மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய்யான எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி பணத்தை உங்கள் நண்பரான அதானி நிறுனங்களிக்கு லாபம் அடையும் வகையில் வழங்கியது ஏன்?
4. 2020இல் சீனாவுக்கு நீங்கள் நற்சான்று வழங்கியும், அவர்கள் தொடர்ந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பது ஏன்?
5. தேர்தல் ஆதாயத்திற்கு வெறுப்பு அரசியலை வெளிப்படையாக பயன்படுத்துவது ஏன்? மக்கள் மத்தியில் அச்சம் தரும் பதற்றமான சூழலை உருவாக்குவது ஏன்?
6. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் பெருகி நிற்கும் நிலையில் நீங்கள் அமைதி காப்பது ஏன்? திருடர்களை தப்பி ஓட விட்டு, இந்தியர்களை கஷ்டப்பட வைப்பது ஏன்?
7. நாட்டின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பலவீனம் அடையச் செய்வது ஏன்? அரசியல் அமைப்பின் விழுமியங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடந்த 9 ஆண்டுகளில் பலவீனம் அடைந்தது ஏன்?
8. சமூக நீதிதியின் அடித்தளத்தை சீர்குலைப்பது ஏன்? பெண்கள், ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்கு ஆளாகும் போது அமைதியாக இருப்பது ஏன்? சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை புறக்கணிப்பது ஏன்?
9. கோவிட் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்காதது ஏன்? மக்கள் ஊர் திரும்ப முடியாத நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் தராமல் திடீரென லாக்டவுன் அறிவித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Jairam Ramesh, PM Modi