முகப்பு /செய்தி /இந்தியா / ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை ஏற்கும் சேவாக்

ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை ஏற்கும் சேவாக்

விரேந்தர் சேவாக்

விரேந்தர் சேவாக்

சேவாக்கின் இந்த மனிதநேய மிக்க செயல் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுடைய கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே பஹனகா பஜார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. மேலும், அதன் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததால், பெங்களூருவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற ரயிலின் பெட்டிகளும் கவிழ்ந்தன. இதில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கவிழ்ந்த பெட்டிகளை அகற்றி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றன. இதில், இரண்டு பாதைகளும் சரிசெய்யப்பட்டு, நேற்றிரவு சுமார் 11 மணியளவில் அந்தப் பாதையில் சரக்கு ரயில் இயக்கி பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் இந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் நம் மனதை உலுக்குகின்றன. இந்த துயரமான தருணத்தில் குறைந்தபட்சம், உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்க முடியும். அந்த குந்தைகளுக்கு இலவச கல்வியை சேவாக் சர்வதேச பள்ளியில் விடுதி வசதியுடன் ஏற்படுத்தித் தருகிறேன்.  என்று கூறியுள்ளார். சேவாக்கின் இந்த மனிதநேய மிக்க செயல் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க - ஒடிசா ரயில் விபத்துக்கு இதுதான் காரணம்.. ரயில்வே அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்!

சேவாக் தனது இன்னொரு பதிவில், ‘மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரம் மிக்க ஆண்கள் பெண்களுக்கு ஒரு சல்யூட். மருத்துவ குழுக்கள், தன்னார்வலர்கள், தாமாக முன் வந்து இரத்த தானம்  செய்தவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்த துயரமான தருணத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Train Accident