ஒடிசா பாலசோர் பகுதியில் இரு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே கலங்க வைத்துள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 261 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. 1000க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்து குறித்து அதில் பயணித்த தமிழக பயணி ஒருவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பயணி வீடியோவில் கூறியதாவது, "எனது பெயர் வெங்கடேஷ், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இந்த கோரமண்டல் ரயிலில் வந்தேன். 6.15 மணிக்கு பாலசோர் வந்தது. அங்கிருந்து புறப்பட்டு 15 நிமிடத்தில் எதிரில் ஒரு எக்ஸ்பிரெஸ் ரயில் வந்தது.
இரு ரயில்களுக்கு நடுவே சரக்கு ரயில் வேறு வந்தது. இந்த மூன்று ரயில்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் மீட்பு குழுவை சேர்ந்தவன். மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். இங்குள்ளவர்கள் எல்லாம் எனது மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் தான். நான் பி7 பெட்டியில் பயணித்தேன்.
பி6 வரை அனைத்து பெட்டிகளும் சேதமடைந்தது. பொது வகுப்பு பெட்டியில் பயணித்தவர்கள் ஒருவர் கூட பிழைத்ததாக தெரியவில்லை. அதிக சடலங்கள் உள்ளன. நான் உடனே மீட்பு குழுவுக்கு தகவல் கொடுத்து நிலவரத்தை கூறினேன். உடனடியாக தகவல் பறிமாறப்பட்டு அரை மணிநேரத்தில் மீட்பு குழுவினர் விரைந்தனர்." இவ்வாறு அந்த வீடியோவில் பயணி வெங்கடேஷ் பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accidents, Odisha, Train Accident