முகப்பு /செய்தி /இந்தியா / ’’பார்த்ததிலேயே மிக மோசமான விபத்து'’: ரயில் விபத்து குறித்து பேசிய மம்தா பேனர்ஜி

’’பார்த்ததிலேயே மிக மோசமான விபத்து'’: ரயில் விபத்து குறித்து பேசிய மம்தா பேனர்ஜி

மம்தா

மம்தா

ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒடிசாவில் நிகழ்ந்திருப்பது 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து பேசிய அவர், தாம் மூன்று முறை ரயில்வே அமைச்சராக இருந்ததாகவும், தான் பார்த்ததிலேயே மிக மோசமான விபத்து இது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு சென்ற மம்தா பேனர்ஜி  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு முன்பாகவே தனது ஆதங்களைவெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், “ரயில்வே துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து மத்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை.

நிலைமை மோசமாகி வருகிறது. ரயில்வே அமைச்சராக நான் இருந்தபோது மோதல் தடுப்பு சாதனங்கள் (Anti-collision devices) அமைக்கப்பட்டிருந்தன. அனால், அவை தற்போது இல்லை. இந்த சாதனங்கள் இருந்திருந்தால் விபத்து நடந்திருக்காது,” என்று கூறினார். இதுபற்றி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த ரயில் விபத்து குறித்து பேசிய ஆர்.ஜே.டி. கட்சித் தலைவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். மத்திய அரசின் அலட்சியமே, ரயில்வே துறையை அழித்து விட்டதாக லாலு பிரசாத் காட்டமாக கூறியுள்ளார்.

First published: