முகப்பு /செய்தி /இந்தியா / தனுஷ்கோடி முதல் ஒடிசா வரை.. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகள்.!

தனுஷ்கோடி முதல் ஒடிசா வரை.. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகள்.!

ரயில் விபத்து

ரயில் விபத்து

ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்தில் இதுவரை 200க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

இந்தியா உலகின் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்திய ரயில்களில் லட்சக் கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. ஆனாலும் சில நேரங்களில் மிக மோசமான விபத்துகளை இந்திய ரயில்வே சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ரயில் விபத்து தான் தற்போது நிகழ்ந்திருக்கிறது. இது இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நிகழ்ந்த மோசமான விபத்துகள் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜூன் 16, 1981 – பீகாரில் பாகமதி ஆற்றி்ல் உள்ள பாலத்தில் பயணிகள் ரயில் ஒன்று பாய்ந்தது. இந்த விபத்தில் 750 பயணிகள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 20, 1995 – ஃபிரோசாபாத்தில் புருசோத்தம் விரைவு ரயில் கலிண்டி பயணிகள் ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 305 பயணிகள் உயிரிழந்தனர்.

நவம்பர் 26, 1998- பஞ்சாப் மாநிலம் கானா மாவட்டத்தில் ஜம்முதாவி விரைவு ரயில் மற்றும் சீல்டா விரைவு ரயில் இரண்டும் ப்ரண்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம் புரண்டு கிடந்த மூன்று பெட்டிகளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 2, 1999- பிரம்மபுத்திரா மெயில் ஆவாத் விரைவு ரயிலுஅப் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 285 பயணிகள் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்கள்.

நவம்பர் 20, 2016- கான்பூரில் ஒருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் புக்ரியான் என்ற இடத்தில் இந்தோர்- ராஜேந்திரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 152 பேர் உயிரிழந்தனர். 260 பயணிகள் காயமடைந்தனர்.

Also Read : கோர ரயில் விபத்து - ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி

செப்டம்பர் 9, 2002- பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் ரப்கானி ஆற்றில் தடம் புரண்டு கிடந்த ஹவுரா ராஜதானி ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 140 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். தீவிரவாத தாக்குதலால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

டிசம்பர் 23, 1964 - தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடலில் ஏற்பட்ட புயலால் பயணிகள் ரயில் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 126 பயணிகள் உயிரிழந்தனர்.

மே 28, 2010- மேற்குவங்க மாநிலத்தில் ஜார்கிராம் மாவட்டத்தில் இருந்து மும்பை சென்ற ஜானேஸ்வரி விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

First published:

Tags: Odisha, Train Accident