விளையாட்டு விபரீதத்தில் முடிந்து போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் உள்ளது. அங்கு உள்ளூர் நபர்கள் ஒன்று சேர்ந்து பிரென்ட்லி கிரிக்கெட் போட்டி ஒன்றை விளையாடியுள்ளனர்.
ஜாலியாக விளையாடிய இந்த போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது வாலிபர் நடுவராக இருந்துள்ளார். போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நடுவர் லக்கி பந்துவீச்சாளர் 'நோ பால்' வீசியதாக சைகை காட்டினார். ஆனால், அது நோ பால் இல்லை என பந்துவீச்சாளரும் பீல்டிங்கில் இருந்த அணியின் வீரர்களும் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி மோதலில் வெடித்தது.
பீல்டிங் அணியில் இருந்த வீரர்கள் பேட் மட்டையை எடுத்து தாக்க தொடங்கினர். அப்போது ஸ்முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கியை கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன அங்கிருந்த மற்றவர்கள் நடுவராக இருந்த லக்கியை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் இப்படியா...? இளம்பெண்களுடன் பைக்கில் ஜாலியாய் வீலிங் செய்த இளைஞன்... தீவிரமாய் தேடும் போலீஸ்..!
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை உள்ளூர் மக்கள் திரண்டு பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டில் நோ பால் கொடுத்ததற்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Crime News, Murder, Odisha