முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!

இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!

Odisha Hockey | இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு நீட்டித்ததுள்ளது.

Odisha Hockey | இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு நீட்டித்ததுள்ளது.

Odisha Hockey | இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கும் ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு நீட்டித்ததுள்ளது.

  • Last Updated :
  • Odisha (Orissa), India

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் மகளிர் ஹாக்கி அணி ஆகியவற்றுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஒடிசா மாநில அரசு நீட்டித்துள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டு தொடங்கி 2033ஆம் ஆண்டு வரையில் ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட உள்ளது. மாநில அரசின் காபினட் அமைச்சரவைக் குழு இதற்கான அனுமதியை வழங்கியது.

ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கான ஸ்பான்சராக ஒடிசா அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஒடிசா அரசின் சுரங்கத்துறை சார்பில் இந்திய ஹாக்கி அணியுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி 2018ஆம் ஆண்டு முதல் 2023 வரையில் 5 ஆண்டுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிக்க வேண்டும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஒடிசா அரசு அதை நீட்டிப்பு செய்துள்ளது.

Also see...  65 ஆயிரம் சதுரடி... 11 அடுக்குமாடி... பிரமிக்க வைக்கும் தெலுங்கானா தலைமை செயலக கட்டடம்!

2023ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 2033ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில் இந்த ஒப்பந்தம் நீடிக்கும். இந்த காலகட்டத்திற்கு இந்திய ஹாக்கி அணிகளுக்காக ஒடிசா அரசு ரூ.434.12 கோடியை ஒதுக்கியுள்ளது. நாட்டில் ஹாக்கி விளையாட்டு புத்துயிர் பெற்றதற்கு ஒடிசா அரசின் ஸ்பான்சர்ஷிப் ஒரு காரணம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளன.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கத்தை வென்றது. அதே சமயம், மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக அரையிறுதி வரையிலும் முன்னேறியது.

ஒடிசா அரசு வழங்கும் ஸ்பான்சர்ஷிப் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் நாடெங்கிலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் மிக்க விளையாட்டாக ஹாக்கி விளையாட்டு மாறி வருகிறது. இந்த நிலையில் ஹாக்கி விளையாட்டிற்கு மேலும் ஊக்கம் அளித்து, இளைஞர்களை கவர்ந்திழுக்க ஒடிஸா அரசு முயற்சி செய்கிறது. நாட்டில் உள்ள திறமையாளர்களை வெளிக்கொணரும் முயற்சியாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

Also see...  ஆடு வளர்ப்பில் அசத்தல் முயற்சி - மாத்தி யோசித்த தெலுங்கானா விவசாயி

ஹாக்கி மையம்

ஹாக்கி விளையாட்டுக்கான ஊக்கம், அதுதொடர்பிலான வணிகம், அதை மையப்படுத்திய சுற்றுலா என்று உலக சுற்றுலா மையமாக ஒடிசாவை மாற்றம் செய்யும் முயற்சிகளை அந்த மாநில அரசு செய்து வருகிறது. ஹாக்கி விளையாட்டைப் பொருத்தவரையில் இந்தியாவுக்கு என்று பெரும் பாரம்பரிய பெருமை இருக்கிறது. அத்துடன் நமது தேசிய விளையாட்டாகவும் உள்ளது.

top videos

    இந்த நிலையில் ஒடிசா அரசு வழங்கும் ஊக்கத்தின் காரணமாக இந்தியாவின் ஹாக்கி பாரம்பரியம் மென்மேலும் பலமடையும் என்று கருதப்படுகிறது. ஹாக்கி விளையாட்டு நல ஆர்வலர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Hockey, Odisha, Sports