ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகன்நாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது நபர் லலியா ருஞ்சிகர், இவரது மனைவி 35 வயதான பத்மா. பத்மா சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஆஷா ஊழியராவார். இவர்களின் அண்டை வீட்டில் பத்மாவுக்கு சகோதரி முறை வேண்டிய உறவுக்காரப் பெண் வசித்து வந்துள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணி.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று பத்மா தனது உறவுக்காரப் பெண்ணை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு செல்லலாம் என அழைத்துள்ளார். பத்மாவின் மகன் பத்மா மற்றும் அந்த உறவுக்கார பெண் இருவரையும் வண்டியில் அழைத்து ஒரு ஆள் அரவம் இல்லாத வீட்டுப் பகுதியில் இறக்கிவிட்டுள்ளார். அங்கு பத்மாவின் கணவர் இருந்த நிலையில், தம்பதி இருவரும் சேர்ந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அந்த வீட்டில் பெண்ணை தள்ளி பூட்டிய நிலையில், பத்மாவின் கணவர் அந்த கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை மனைவி பத்மா செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை பரப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கடும் உடல், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், வீடியோ இணையத்தில் பரவியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை தடுத்து உறவினர்கள் விவரத்தை விசாரித்த போது தான் உண்மை அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: 12 ஆண்டுகளில் 1,300 யானைகள் மரணம்.. அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்ட அசாம் அரசு
உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கவே, லலியா மற்றும் பத்மா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனிப்பட்ட குடும்ப தகராறே இதற்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Odisha, Rape