இந்தியாவில் கோடைகாலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் உடலை குளுமையாக வைத்துக் கொள்ளவும் உடலில் நீர்சத்து குறைபாட்டை தவிர்க்கவும் நீர் சத்து மிகுந்த உணவு பொருட்களை தேடி தேடி வாங்கி ருசித்து வருகின்றனர். முக்கியமாக வளைகுடா பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது.
இதுபோன்ற நேரங்களில் முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் லெமன் சோடா, இளநீர் போன்ற உடலுக்கு புத்துணர்ச்சி தரும், அதே வேளையில் உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்களை அருந்துவது மிகவும் நல்லது. இது போன்ற பானங்களை தவிர்த்து நீர் சத்து மிகுந்த இயற்கை பழ வகைகளான தர்பூசணி போன்றவையும் கோடை காலங்களில் மக்களால் அதிக விரும்பப்படும் உணவுப் பொருட்களாகும்.
அந்த வகையில் தர்பூசணி பழங்களுக்கே மிகப்பெரும் சவால் விடும் வகையில் “டாட்டி முஞ்சலு” என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் நுங்குகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. தென்னிந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற இந்த நுங்குகள் கோடைகாலங்களில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு உணவாகும்.முன்னர் காலங்களில் இந்த சுவை மிகுந்த நீர்ச்சத்து மிகுந்த நுங்குகள் வெறும் கிராம பகுதிகளில் மட்டுமே அதிகம் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஏனெனில் மரத்திலிருந்து பறித்து உடனடியாக உள்ளூரிலேயே விற்பனை செய்து விடுவார்கள்.
Read More : பெண்களுக்கு மாதம் ரூ.2000.. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு
ஆனால் தற்போது பெருகிவிட்ட போக்குவரத்து வசதிகளால் இவை பெரு நகரங்களிலும் வியாபாரிகளால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.குறிப்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த நுங்குகள் மக்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன. சாலையோரம் இருக்கும் வியாபாரிகளிடமிருந்து நுங்குகளை வாங்கி ருசிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு வெயிலின் தாக்கத்திலிருந்தும் போதுமான அளவு விடுதலை அளிப்பதால் இவற்றிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதைப் பற்றி பேசிய ஒரு உள்ளூர் வியாபாரி கூறுகையில், “இந்த நுங்குகளின் வரவால் ஏற்கனவே சந்தையில் அதிகம் பிரபலமாக இருந்த “டாட்டிகயா” எனப்படும் பழத்திற்கான வரவேற்பானது சற்று குறைந்துள்ளது. சந்தையில் உள்ள அனைத்து பழங்களையும் ஓரம் தள்ளிவிட்டு நுங்குகள் தான் முன்னிலையில் தற்போது விற்பனையாகி வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.
கோடைகாலங்களில் பொதுவாக விற்பனையாகும் மற்ற பழங்களை விட ஆந்திராவில் நுங்குகள் மிகவும் அதிக அளவில் விற்பனையாவதும், டாட்டிக்கயா என்ற பழத்தை விட இந்த நுங்குகளை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த வியாபாரி கூறியுள்ளார் நுங்கு வியாபாரிகள் முதலில் பனை மரத்திலிருந்து நுங்குகளை பறித்து, பிறகு அவற்றை ஒன்றாக சேர்த்து நகரங்களுக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Summer, Summer Heat, Visakhapatnam S01p04