பாஜக-வில் வாரிசு அரசியல் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நியூஸ் 18 தொலைக்காட்சியின் தென் பிராந்திய ஆசிரியர் விவேக் மற்றும் நியூஸ் 18 கன்னட ஆசிரியர் நிகல் ஆகியோருக்கு அமித் ஷா பேட்டியளித்தார். அப்போது எடியூரப்பாவின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை என்றார்.
வாரிசு அரசியலுக்கும், அரசியல்வாதியின் மகன் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார். பாஜக யாருடைய குடும்பப் பிடியிலும் இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி மீதான தரக்குறைவான விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசிய அவர், ’எதிர்க்கட்சிகளின் இத்தகைய மலிவான செயல்கள் பிரதமர் மோடி மீதான அன்பை அதிகரிக்கும். கர்நாடக மாநிலத்திலும் இது எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.
பாஜக இதை போன்ற கீழ்த்தரமான சிந்தனையுடன் பிரச்சாரங்களுக்குச் செல்வதில்லை. பிரதமர் இந்தியாவின் கண்ணியத்தை நிலைநாட்டியுள்ளார், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பைப் பேணியுள்ளார். அவரை, தரக்குறைவாக வசைபாடுவது வாக்காளர்களிடம் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இதற்கிடையே, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா, மதசார்பற்ற ஜனதா கட்சி தலைவர் தேவ கௌடா, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்காகாந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் வாசிக்க: இடஒதுக்கீடு அளவை 75% ஆக அதிகரிப்போம்... காங்கிரஸ் முக்கிய வாக்குறுதி...!
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்றுபேசிய பிரதமர் மோடி, ‘இந்த கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்று இருப்பது அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கூறினார். அரசின் மக்கள் நலத்திட்டங்களால் பெருமளவு மக்கள் பயன்பெற்று இருப்பதாக அவர் கூறினார். மத்திய அரசு மக்கள் நலனை முன்நிறுத்தியே செயல்பட்டு வருவதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Amit Shah To News 18, Karnataka Election 2023