முகப்பு /செய்தி /இந்தியா / ‘நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை’ – நியூஸ் 18 மாநாட்டில் அமித் ஷா பேச்சு

‘நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை’ – நியூஸ் 18 மாநாட்டில் அமித் ஷா பேச்சு

அமித் ஷா

அமித் ஷா

எங்கெல்லாம் பாஜக வலுகுறைந்துள்ளதோ, அங்கு எங்களது கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் நீதித்துறைக்கும் அரசுக்கு மேலே எந்த ஒரு மோதிரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் இந்தியா மாநாட்டில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது- பொது மக்களுக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை உண்டு. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் நீதி துறைக்கும் இடையே எந்த ஒரு மோதல் போக்கும் கிடையாது. எந்த ஒரு அரசும் நீதித்துறையுடன் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு எல்லையை வரையறுத்து உள்ளது. அதன்படியே அனைத்து அமைப்புகளும் செயல்பட வேண்டும்.

நீதிபதிகள் நியமன முறையில் புதிய வழிமுறையை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. இதுபற்றி மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரெஜிஜு ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். அரசு அளித்த புதிய வழிமுறைகளை பரிசீலித்து மட்டுமே பார்க்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரப்பட்டது. இதனை மோதல் போக்காக பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் பாஜக கட்டமைப்பு வலுவின்றி உள்ளது. அதை சரிப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். முன்னேற்றமும் கண்டுள்ளோம். பல தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. எங்கெல்லாம் பாஜக வலுகுறைந்துள்ளதோ, அங்கு எங்களது கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.

கடந்த முறை மேற்கு வங்கத்தில் எங்களின் தொகுதி எண்ணிக்கை உயரும் என்று நான் கூறியபோது யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் அதை செய்து காட்டினோம். ஒடிசா மற்றும் தெலுங்கானாவிலும் எங்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். எங்கள் கட்சி களத்தில் செயல்படுகிறது. கூடுதலாக, பிரதமர் மோடியின் ஒளி இந்தியாவின் கடைசி கிராமத்திலிருந்து தலைநகர் டெல்லி வரை பரவியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: NEWS18 RISING INDIA