முகப்பு /செய்தி /இந்தியா / பளபளக்கும் சிவப்பு நிற கவுனில் இஷா அம்பானி.. கவரும் ஃபேஷன் ஷோ போட்டோஸ்!

பளபளக்கும் சிவப்பு நிற கவுனில் இஷா அம்பானி.. கவரும் ஃபேஷன் ஷோ போட்டோஸ்!

இஷா அம்பானி

இஷா அம்பானி

NMACC பேஷன் விழாவில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்திருந்த உடை பலரையும் கவர்ந்துள்ளது.

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பிரம்மாண்ட நீடா முகேஷ் அம்பானி கலாசார மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட காலச்சார மையம் நீடா அம்பானியின் கனவு திட்டம் எனக் கூறப்படுகிறது. இதன் தொடக்க விழாவின் நாட்டின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

அத்துடன் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் டாம் ஹாலாந்து, செந்தாயா ஆகியோருடன் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், ஜான்வி கபூர், வருண் தவான், கிருத்தி சோனான், கரீனா கபூர், அமீர் கான், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், வித்யா பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் இந்திய ஃபேஷன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் கண்கவர் ஆடை ஆலங்காரத்துடன் வருகை தந்தனர். குறிப்பாக இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்திருந்த உடை பலரையும் கவர்ந்துள்ளது.




 




View this post on Instagram





 

A post shared by Zoom TV (@zoomtv)



பளபளப்பான சிவப்பு நிற கேப்லெட்டுடன் கருஞ்சிவப்பு நிற கவுனை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வருகை தந்தார் இஷா அம்பானி. அத்துடன் ஒரு வியத்தகு வைர நெக்லஸ் உடன் பொலிவுடன் காட்சி அளித்தார் இஷா.முன்னணி திரைப்பிரபலங்களுக்கு இணையான பேஷனில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா நிகழ்வில் பங்கேற்றார். மும்பை நகரே விழாக்கோலம் பூண்டது போல் நடந்த இந்த தொடக்க விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியிடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

top videos
    First published:

    Tags: Fashion, Isha Ambani, Mukesh ambani, Nita Ambani