முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பயன்படுத்த வேண்டும்.. நிதீஷ் குமார் கருத்து

கர்நாடகா பதவியேற்பு விழாவை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பயன்படுத்த வேண்டும்.. நிதீஷ் குமார் கருத்து

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முன்னணி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Bihar, India

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று பதவியேற்கவுள்ளது. முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிலையில் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்க உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து புதிய முதல்வர் யார் என்ற குழப்பம் சில நாட்கள் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இந்த புதிய அரசின் பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பியுள்ளது.

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு தலைவர் பரூக் அப்துல்லா, ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்வில்லை என அறிவித்துள்ளார். எனினும் தனது பிரதிநிதியாக மக்களவை உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதாரை அனுப்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றம்... மே 28ஆம் தேதி திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி..!

நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை தவிர, காங்கிரஸ் தலைவர் கார்கே, காந்தி குடும்பத்தினர் , காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

First published:

Tags: CM MK Stalin, Karnataka Election 2023, Nitish Kumar