முகப்பு /செய்தி /இந்தியா / விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்... காங்கிரஸ் அறிவிப்பு..!

விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்... காங்கிரஸ் அறிவிப்பு..!

நிதிஷ்குமார்

நிதிஷ்குமார்

Nitish Kumar Meets M Kharge, Rahul Gandhi | பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்துப் பேசினார்.

  • Last Updated :
  • Delhi, India

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றாக பங்கேற்கும் கூட்டம் பற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் நேற்று சந்தித்தார். ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும்,

எப்போது, எங்கு நடக்கும் என்ற அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க... ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்...!

top videos

    இந்த கூட்டத்தில் ஏராளமான தலைவர்கள் பங்கேற்பர் எனவும் கே.சி.வேணுகோபால் கூறினார். நிதிஷ்குமாருடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இனி நாடு ஒன்றுபடும் என குறிப்பிட்டுள்ளார்.

    First published:

    Tags: Congress, Mallikarjun Kharge, Nithish kumar, Rahul Gandhi