இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சாலை போக்குவரத்து பாதுகாப்பில் அண்டை மாநிலமான கேரளா பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நவீன தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 750 செயற்கை கேமராக்கள் சாலை விதிகளை தானாக கையாண்டு ஆராய்ந்து அபராதம் விதித்து வருகிறது.
இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வைத்துக் கொண்டு, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மூன்றாவது நபராக ஏற்றி செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று கேரள அரசு முடிவு செய்தது. அபராதம் விதிப்பதில் இருந்து விதிவிலக்குக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் கேரள அரசு போக்குவரத்துத் துறை அமைச்சர் எழுதியிருந்தார். குடிமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் வரை அபராதங்கள் விதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி எளமரம் கரீம் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவர் தனது கடிதத்தில், கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். கார் வாங்கும் வசதி இங்குள்ள பெரும்பாலான மக்களிடம் இல்லை. எனவே, சாலை பாதுகாப்பு விதிகளை ஒழுங்காக கடைபிடித்து, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை 3வது நபராக அனுமதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதையும் வாசிக்க: 'பயங்கரமான இரவாக இருக்கும்..' வெயில் குறித்து வெதர்மேன் கொடுத்த ஹாட் அப்டேட்!
இதற்குப் பதிலளித்த நிதின் கட்கரி, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று தெரிவித்தார். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ் இது தடை செய்யப்பட்டது என்று தெரிவித்த அவர், உலகம் முழுவதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala, Motor, Motor Vehicles Amendment Bill 2019, Road accident, Vehicle Registration