முகப்பு /செய்தி /இந்தியா / நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம்... இந்தியாவின் கலைகள் சங்கமிக்க ஓர் இடம்..!

நீடா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையம்... இந்தியாவின் கலைகள் சங்கமிக்க ஓர் இடம்..!

நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்

நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்

இந்திய கலைஞர்களுக்கு உலக அளவில் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க இந்த மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் நீடா முகேஷ் அம்பானி கல்சுரல் சென்டரின் பிரம்மாண்டமான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது நீடா முகேஷ் அம்பானியின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இதுகுறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான நீடா முகேஷ் தெரிவித்ததாவது, இந்த கலாச்சார மையத்தை உருவாக்கியிருப்பது ஒரு புனித பயணம் போன்றது. சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இயங்க ஒரு இடமாகவும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு இடமாகவும் இதனை உருவாக்க எங்களுக்கு ஆர்வமாக ஏற்பட்டது.

இது இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” என்று பேசினார்.

இஷா அம்பானி தனது அம்மாவின் கலை மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலாச்சார மையம் தொடர்பான அறிவிப்பை கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு வெளியிட்டார். அமெரிக்க ஐரோப்ப நாடுகளைப் போல இந்தியாவில் இந்திய கலைஞர்களுக்கு உலக அளவில் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க இந்த மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே 2000 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திரையரங்கம் உள்ளது.

இங்கே குழந்தைகள், மாணவ, மாணவியர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. இந்த மையம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் இந்தியாவின் நீண்ட கலாச்சாரத்தின் மீது கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கலைஞருக்கு பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு மேடையை வழங்குவதற்காகவும்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Mukesh ambani, Nita Ambani