இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா முகேஷ் அம்பானி மும்பையில் கலாச்சார மையம் ஒன்றைத் திறந்துள்ளார். இந்த தொடக்க விழாவிற்கு நீடா அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்என்று முழு அம்பானி குடும்பமும் பங்கேற்றது.
அது மட்டும் அல்லாமல் தொடக்க விழாவிற்கு இந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக் கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், ஜான்வி கபூர், வருண் தவான், கிருத்தி சோனான், கரீனா கபூர், அமீர் கான், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், வித்யா பாலன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
மும்பையை விழாக்கோலம் பூண்டது போல் நடந்த இந்த தொடக்க விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியிடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வகையில், இப்போது, கலாச்சார மையத் விழாவில் ரகுபதி ராகவ் ராஜா ராம் பாடலுக்கு நீடா அம்பானி அழகாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கிளிப் இன்ஸ்டாகிராமில் NMACC இந்தியாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தால் பகிரப்பட்டது.
வீடியோவில், நீடா அம்பானி அழகான இளஞ்சிவப்பு நிற எம்பிராய்டரி நிறைந்த சோளி , பெரிய மரகத நெக்பீஸ் அணிந்து நேர்த்தியான பரதநாட்டிய நகர்வுகளை கொண்டு நடனமாடி திறப்பு விழா மேடையையே தனதாக்கினார்.
அதோடு "6 வயதில் தனது பரதநாட்டியப் பயணத்தைத் தொடங்கிய நீடா முகேஷ் அம்பானி எப்போதும் ஒரு நடனக் கலைஞரின் இதயத்தைக் கொண்டவர்" என்ற தலைப்பிட்டு இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஒரு நிமிடம் 33 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ரகுபதி ராகவா ராஜா ராம் பாடலின் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் குரல் பதிப்பிற்கு நீடா முகேஷ் அம்பானி நடனம் ஆடினார். அதே மேடையில் 50 வெள்ளை நிற உடை அணிந்த துணை நடன கலைஞர்கள் நடனம் ஆடினர்.
புதிதாக தொடப்பட்டுள்ள இந்த கலாச்சார மையத்தின் 2,000 இருக்கைகள் கொண்ட கிராண்ட் தியேட்டரில் இந்த நடன நிகழ்ச்சி நடந்ததாகத் தெரிகிறது. நடனத்திற்கு ஏற்ப அரங்கத்தின் ஒளி அமைப்புகளும் மாற்றப்பட்டதால் பார்வையாளர்கள் கண்களுக்கு இது பெரிய விருந்தாக அமைந்துள்ளது. நீடா அம்பானியின் இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mumbai, Nita Ambani