முகப்பு /செய்தி /இந்தியா / கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வரும் நீடா அம்பானி கலாச்சார மையம்...

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு வரும் நீடா அம்பானி கலாச்சார மையம்...

கலாச்சார மையம்

கலாச்சார மையம்

நீடா அம்பானி கலாச்சார மையம் ஏப்ரல் 3-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு வருகிறது.

  • Last Updated :
  • Mumbai, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ராவில் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில், 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு மொழிகளை, இனக்குழுக்களைக் கொண்ட இந்தியாவில் நூற்றுக்கணக்கான பாரம்பரிய கலைகள் உள்ளன. இந்தியாவில் தோன்றிய இந்த கலைகளை உலக அரங்கில் எடுத்துச்செல்லும் விதமாக புதிய முயற்சியை நீடா அம்பானி தொடங்கியுள்ளார்.

இதன் மூலம், இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் கலைஞர்களை அங்கீகரிப்பதற்கான முயற்சியாக மும்பையில் பிரம்மாண்டமாக இந்த கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது.

4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த கலாச்சார மையத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த், சச்சின், ஆமிர்கான் உள்பட இந்தியாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

top videos

    இந்த கலாச்சாரம் மையத் திறப்பு விழா மூன்று நாள்களாக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. மூன்றாவது நாள் நிகழ்வில் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்திலுள்ள கலை மன்றத்தை (The Art House) கோகிலாபென் திருபாய் அம்பானி விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்தக் கலாச்சாரம் மையம் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் ஏப்ரல் 3 -ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Nita Ambani