முகப்பு /செய்தி /இந்தியா / மாதவிடாய் கொண்டாட்டம்.. களங்கத்தை போக்க இளைஞரின் புதுமையான முயற்சி

மாதவிடாய் கொண்டாட்டம்.. களங்கத்தை போக்க இளைஞரின் புதுமையான முயற்சி

மாதவிடாய் விழிப்புணர்வு

மாதவிடாய் விழிப்புணர்வு

சமூதாயத்தில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நிஷாந்த் பகீரா என்ற இளைஞர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

தொழில்நுட்ப முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட்டான இளைஞர்கள் என காலம் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், மனிதர்களான நாம் இன்னும் பல விஷயங்களை தீட்டு, களங்கம் என தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிகிறோம்.

அதற்கு சிறந்த உதாரணம் மாதவிடாய். பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் உடலியல் மாற்றத்தை ஏதோ பேசக் கூடாத பொருளாக சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிய வைத்துள்ளோம். மாதவிடாய் குறித்து மக்கள் மனதில் இருக்கும் தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக மகராஷ்டிராவின் தானே நகரைச் சேர்ந்த நிஷாந்த் பகீரா என்ற இளைஞர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக மாதவிடாய் அமைப்பு ஒன்றை நிறுவி, மாதவிடாய் என்பது பெண்கள் அனைவருக்கும் வரும் சாதாரண உடலியல் மாற்றம், இதில் எந்த களங்கமும் தீட்டும் இல்லை என்பதைப் புரிய வைக்க மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் ஒன்றும் வெளியே மறைக்க வேண்டிய விஷயம் அல்ல என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்துகிறார்.

எங்கள் நிறுவனத்தில் மாதவிடாயை ஒரு திருவிழா போல் கொண்டாடுகிறோம். எங்களைப் பார்த்து தற்போது நான்கு கண்டங்களில் உள்ள 19 நாடுகளில் இதுபோன்ற விழாக்கள் நடைபெற்று வருகின்றன. உங்களுக்கு எப்படி இப்படியொரு யோசனை பிறந்தது என அவரிடம் கேட்டால், “மாதவிடாய் என்பது இயற்கையான விஷயம். பெண்களின் உடலில் இந்த அறிவியல் உண்மையை சமூகத்தால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவோ முன்னேறி விட்டோம் என்று கூறுகிறோம். ஆனால் இன்றும் பல வீடுகளில் மாதவிடாய் சமயத்தில் சமையல் செய்வதற்கோ, பூஜை அறையில் நுழைவதற்கோ அனுமதியில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டின் வெளியே தனியாக குடிசையில் தங்க வைக்கும் கொடுமையும் நம் நாட்டில் நடக்கிறது. குடும்பத்தில் ஏதாவது விசேஷம் நடைபெறுகிறது என்றால், மாதவிடாய் நாட்களை தள்ளிபோக வைக்கும் மாத்திரைகளை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்” என கொந்தளிக்கிறார் நிஷாந்த்.

“மாதவிடாய் சமயத்தில் நேப்கின் அணியுமாறு பெண்களை கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு இது ரொம்பவே பிடித்திருந்தது. நேப்கின்களை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்று எங்களுக்கு தெரிந்ததும், காட்டன் பேடுகளை அவர்களுக்கு வழங்கினோம். மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகளை உபயோகிக்குமாறு பெண்களை கேட்டுக்கொண்டோம். இதனால் வீணாவதை குறைக்கலாம்” என தங்களது பிரச்சாரம் குறித்து விளக்குகிறார் நிஷாந்த்.

“இந்தப் பிரச்சாரத்தை தானே நகரிலிருந்து தொடங்கினேன். அதன்பிறகு பல சமூக அமைப்புகள் என்னைத் தொடர்பு கொண்டன. வெளிநாட்டில் வாழும் என் நண்பர்கள் பலருக்கு இந்த பிரச்சாரம் பிடித்திருந்தது. அவர்களது நாட்டில் அங்குள்ள சமூக அமைப்புகளின் உதவியோடு இந்த விழாக்களை நடத்துகிறார்கள். இதுவரை நான்கு கண்டங்களில் 19 நாடுகளில் மாதவிடாய் விழா நடைபெற்று வருகிறது” என்கிறார் நிஷாந்த்.

நிஷாந்தின் பிரச்சாரத்திற்காக பல சமூக அமைப்புகளும் தன்னார்வ நிறுவனங்களும் உதவி செய்துள்ளன. பொதுமக்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு திருவிழாக்களை பயன்படுத்தி கொள்கிறார். இது தொடர்பாக கேம்களை கூட உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டங்களில் பெண்களின் மாதவிடாய் தொடர்பான கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்.

Also Read : வீட்டுக்குள் அடித்த துர்நாற்றம்.. திடீரென பற்றிய தீ.. அலறியடித்த கூட்டம்!

“மாதவிடாய் விஷயத்தில் பெண்களுக்கு முதல் தடையாக இருப்பது ஆண்களே. அதனால் தான் மாதவிடாயை சுற்றி இருக்கும் விஷயங்களை ஆண்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காரணத்திற்காக தான் மாதவிடாய் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஆண்களையும் பங்கேற்க அழைக்கிறோம். அவர்கள் முதலில் இதை கொண்டாட வேண்டும். எங்களுடைய பிரச்சாரத்திற்கு பல ஆண்களும் பெண்களும் தன்னார்வலர்களாக உதவி செய்கிறார்கள். ஆகையால் பெண்களுக்கு சமமாக ஆண்களும் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்” என நிஷாந்த் கூறுகிறார்.

First published:

Tags: Maharastra, Menstruation