நெட்வொர்க் 18 நடத்தும் ரைசிங் இந்தியா நிகழ்வு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுத்தவர்களை அழைத்து கவுரவிப்பது இந்த நிகழ்வின் நோக்கமாக உள்ளது. நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
இன்றைய நிகழ்வில், நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி உடனான கலந்துரையாடலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான விஷயத்தில் இரு கட்சியினரிடையே கருத்து மோதல் உண்டானது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் இவ்வாறான ஒரு பதிலை தெரிவித்துள்ளார் அமித்ஷா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, NEWS18 RISING INDIA