முகப்பு /செய்தி /இந்தியா / நியூஸ்18 நடத்தும் ரைசிங் இந்தியா மாநாடு...கொண்டாடப்பட வேண்டிய 20 ரியல் ஹீரோக்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சி...

நியூஸ்18 நடத்தும் ரைசிங் இந்தியா மாநாடு...கொண்டாடப்பட வேண்டிய 20 ரியல் ஹீரோக்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சி...

ரைசிங் இந்தியா மாநாடு 2023

ரைசிங் இந்தியா மாநாடு 2023

நியூஸ்18 நெட்வர்க் குழுமத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான ரைசிங் இந்தியா மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

நியூஸ்18 நெட்வர்க் குழுமத்தின் மிகப் பெரிய சாதனையாக 2023 ஆம் ஆண்டிற்கான ரைசிங் இந்தியா மாநாட்டை பூனாவல்லா ஃபின்கார்ப் லிமிடெட் இணைந்து வரும் மார்ச் 29 மற்றும் 30 தேதிகளில் டெல்லி தாஜ் பேலஸ்ஸில் நடத்துகின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுப்பதைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உலகளவில் இந்தியா ஏற்படுத்தியுள்ள மாற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவுள்ளனர். மேலும் இந்தியாவில் கடைக்கோடியில் இருந்து சமுதாய முன்னேற்றத்திற்காக உழைத்த மக்களைக் கொண்டாடும் விதமாக 20 ரியல் ஹீரோக்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் சிறப்புரையாற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜி20 மாநாட்டில் இந்தியாவின் நிலையைப் பற்றிப் பேசவுள்ளார். மேலும் இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர் ஆகியவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அரசியல், கலை, வணிகம் மற்றும் கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். பெருநிறுவன தலைவர்களான இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தின் தலைவர் விவேக் தியாகி, அக்னிகூல் காஸ்மோஸ் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், போட் நிறுவனத்தின் அமன் குப்தா, ஏதர் நிறுவனத்தின் தருண் மேத்தா மற்றும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் அபய் பூடாடா ஆகியோர்கள் ‘Made in India rising aspirations of young India’ என்ற தலைப்பில் அவர்களின் அறிவுத் திறன்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து, ‘Women’s Era’ என்ற தலைப்பில், ரகுல்ப்ரீத் சிங், ஷில்பா ராவ், சுகர் (அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்) இருந்து வினிதா சிங், சீரம் நிறுவனத்தின் ஆதர் பூனாவாலா, போயிங் நிறுவனத்தின் சலில் குப்தே, டிக்சன் நிறுவனத்தின் சுனில் வச்சானி, ABB நிறுவனத்தின் சஞ்சீவ் சர்மா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இருந்து சந்தோஷ் ஐயர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சீரம் நிறுவனத்தின் ஆதர் பூனாவல்லா மற்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர். சுப்பிரமணியம் போன்றவர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளது. பாலிவுட் நடிகர்களான சித்தார்த்தா ஆனந்த், அயன் முகர்ஜி, காஜல் அகர்வால் மற்றும் மிருணால் தாக்கூர் ஆகியவர்கள் 'One India - One Cinema’ என்ற தலைப்பில் உரையாற்றுவர். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீன் மற்றும் ஆஸ்கார் விருது வென்ற குனீத் மோங்கா ஆகியவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாடு குறித்து, நியூஸ்18 நெட்வொர்க் CEO அவினாஷ் கவுல் தெரிவிக்கையில், இந்தியாவின் பெருமைமிக்க வரலாற்றாசிரியராக நியூஸ்18 நெட்வர்க் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார். நியூஸ்18 குழுமம் 69 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களைச் செய்தி மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டலாகத் திகழ்வதாகவும், இதன் மூலம் பார்க்கப்படாத 20 சாதனையாளர்களைக் கண்டறியப்பட்டுக் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களை ரியல் ஹீரோஸ் என்று நாங்கள் அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Also Read : பிளாட்டினத்தில் தாலி.. பரிசாக கொடுக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. இந்தியாவின் ஆடம்பர திருமணங்கள் இதோ!

இந்த மாநாட்டை நடத்துவதில் பெருமைகொள்வதாகவும் நியூஸ்18 குழுமம் 69 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களைச் செய்தி மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டலாகத் திகழ்வதாகக் கூறியுள்ளார். பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசியல், தொழில்துறை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறை சார்ந்த வல்லுநர்களின் பார்வையை ஒன்றாய் இந்த மாநாட்டில் தெரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

top videos

    பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபய் பூதடா தெரிவிக்கையில், நியூஸ்18 - உடன் இணைந்து இந்த செயலில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். அவர்களின் குழுமம் ஒன்றுபட்ட கொள்கையுடன் உருவாக்கப்பட்டு, தனிநபர்களின் ஊக்குவித்து அவர்களின் கனவுகளை உணர உதவுகின்றனர் என்றும், இந்த மாநாட்டின் மூலம் கொள்கை தயாரிப்பாளர்கள், உலக முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பெருநிறுவன தலைவர்கள் ஆகியவர்களை ஒன்றாய் இணைத்து இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் உலகளாவிய சக்தியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடல் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: News18, News18 Network, NEWS18 RISING INDIA