முகப்பு /செய்தி /இந்தியா / 7.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் நீக்கம்- காரணம் தெரியுமா?

7.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் நீக்கம்- காரணம் தெரியுமா?

ஏஎன்ஐ

ஏஎன்ஐ

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • New Delhi, India

ட்விட்டர் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் முதன்மையான வலைத்தளமாக ட்விட்டர் செயல்படுகிறது. குறிப்பாக, செய்தி சார்ந்த தகவல் பரிமாற்றங்களுக்கு ட்விட்டர் முக்கியத் தளமாக இருந்துவருகிறது. கடந்த ஆண்டு தொழிலதிபர் எலான் எஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ட்விட்டரை நான் வாங்கினால் கண்டிப்பாக எடிட்டிங் வசதியைக் கொண்டுவருவேன் என்று கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், அங்கீகரிக்கப்பட்ட கணக்கு வைத்துக்கொள்ளக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். இந்த முறை அமல்படுத்தப்பட்டு, கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்குகளின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.

மேலும், ட்விட்டர் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதனால் சில தினங்களுக்கு முன்பு பிரபலங்களின் ப்ளூ டிக்கள் நீக்கப்பட்டு, மீண்டும் தரப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-யின் கணக்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ட்விட்டர் விதிகளைப் பின்பற்றாமல் வெறுப்பு கருத்துகள், போலி செய்திகளைப் பரப்பி சமூக அமைதிகளை குழைப்பவர்கள், அரசால் பரிந்துரைக்கப்படும் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டது. ஆனால், நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்தியாவின் மிக முக்கிய செய்தி நிறுவனமாக விளங்கும் ஏன்.என்.ஐயின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஏஎன்ஐ ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’வயது காரணத்தினால் ஏஎன்ஐ-யின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனம் அவருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ட்விட்டரில் கணக்கு வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் 13 வயது இருக்கவேண்டும் என்றும், அதனை ஏஎன்ஐ கணக்கு பூர்த்திசெய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : காங்கிரஸ் என்னை 91 முறை அவமதித்துள்ளது - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி

சுமார் 7.6 மில்லியன் பேர் பின்தொடரும் ஏஎன்ஐ-யின் ட்விட்டர் கணக்கை, 13 வயதிற்குக் குறைவாகவுள்ளது என்று கூறி முடங்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: ANI, Twitter