‘UPI பண பரிமாற்றத்திற்கு வாடிக்கையாளர்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை’ என்று தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (National Payments Corporation of India) நிறுவன தலைவர் திலிப் அஸ்பே தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நெட்வொர்க் நிறுவனம் பல்துறை ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் தி ரைசிங் இந்தியா என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்று திலிப் அஸ்பே கூறியதாவது- வாடிக்கையாளர்கள் UPI பண பரிமாற்றத்திற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. தனி நபர்கள் மற்ற தனி நபர்களுக்கோ அல்லது வணிகர்களுக்கோ பண பரிமாற்றம் செய்யும்போது கட்டணம் ஏதும் கூடுதலாக வசூலிக்கப்பட மாட்டார்கள். வர்த்தகர்களுக்கு மட்டுமே நியாயமான கட்டணத்தை சேவைக்காக செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (GDP- யில்) 13% ரொக்கப் பணமாக உள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை முறைக்கு உலக நாடுகளில் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை பின்பற்றி பல நாடுகளும் தங்களது பண பரிமாற்ற முறையை மாற்றிக்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யுபிஐ பண பரிவர்த்தனைக்காக தனி நபர்களிடம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், யூபிஐ பணப்பர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. யூபிஐ மூலமாக ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப கட்டணம் இல்லை. NPCI வழிகாட்டலின்படி எந்த ஒரு நுகர்வோருக்கும் கட்டணம் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NEWS18 RISING INDIA