ஜார்க்கண்ட் மாநிலம், கிரித் மாவட்டத்தில் உள்ள தியோரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பூஷண் பாண்டே. இவர் மீது குற்றச் சம்பவத்திற்காக பினையில் வர முடியாதா கைது உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அந்த நபரை கைது செய்து அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு அதிரடியாக சென்றுள்ளனர். முதலில் கதவை தட்டி பார்த்தபோது கதவை திறக்காத நிலையில், கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
போலீஸ் வந்ததை பார்த்து பாண்டேவும் அவரது மனைவியும் பயத்தில் பின்புறமாக தப்பி ஓடியுள்ளனர். போலீசார் வீட்டை வேகமாக தீவிரத்துடன் சோதனை செய்துள்ளனர். அப்போது பிறந்து 4 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளது. இந்த குழந்தை போலீசார் ரெய்டின்போது அவர்கள் பூட்ஸ் காலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதைத் தொடர்ந்து பூஷண் பாண்டேவை கைது செய்யாமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தனது குழந்தை இறந்த விவகாரத்தை வீடியோ பதிவாக பேசி பாண்டே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளும் அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர். விவகாரத்தில் தலையிட்டுள்ள முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பரோட்டாவுக்கு பாயா கேட்டு ஓட்டலில் ரகளை... 2 போலீஸ்காரர்கள் சஸ்பென்ட்
மேலும் பிரேத பரிசோதனை ஆய்வில் புகார் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. போலீஸ் ரெய்டின் போது பச்சிளங்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Hemant Soren, Jharkhand, Police