புதிய நாடாளுமன்ற தொடக்கவிழாவின் போது வரலாற்று சிறப்புமிக்க செங்கோலினைப் பிரதமர் மோடி நிறுவவுள்ளார். அதிகம் அறியப்படாத இந்த செங்கோலின் முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிகாட்ட மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகள் இடைவிடாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அதிகார மட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
செங்கோல்: ஆங்கிலேயரிடமிருந்து, இந்தியர்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்படும் தருணத்தை குறிப்பாக உணர்த்தும் வகையில் திருவாடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து, நாட்டின் பிரதமராக பதவியேற்கவிருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோல் வழங்கியதாக தமிழ் பத்திரிக்கையான 'துக்ளக்'-ல் கடந்த 2021ம் ஆண்டு கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில், 1978ல், காஞ்சி மடத்தின் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி சீடரிடம் இந்த நிகழ்வு குறித்து நினைவு கூர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ் ஊடங்களில் வெளியான இந்த செங்கோல் குறித்தும், அதன் வரலாற்று முக்கியத்துவதம் குறித்தும் பிரதமர் அலுவலத்துக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கு தெரியவந்தது. பிரதமர் மோடி செங்கோலின் சரித்திரம் மற்றும் செங்கோலின் புனிதத்தன்மையால் ஈர்க்கப்பட்டார். மேலும், அதே செங்கோலினை மீண்டும் நாடாளுமன்ற கட்டிடத்தில் அதன் சரியான இடத்திற்கு கொண்டு வர முடிவு செய்தார்.
2 ஆண்டுகள் தொடர் முயற்சி:
திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து ஜவஹர்லால் நேரு செங்கோல் பெற்றது தொடர்பாக அக்காலத்தில் வெளிவந்த முன்னணி நாளிதழ்கள் மற்றும் வெளியீடுகளை மத்திய அரசு தேடத் தொடங்கியது. ஆகஸ்ட் 25, 1947 தேதியிட்ட டைம் இதழ் இந்த செங்கோல் குறித்து விளக்கமான செய்தியை வெளியிட்டிருந்தது.
மேலும், டொமினிக் லேபியர் மற்றும் லாரி காலின்ஸ் எழுதிய ஃப்ரீடம் அட் மிட்நைட், யாஸ்மின் கான் எழுதிய கிரேட் பார்டிஷின்: தி மேக்கிங் ஆஃப் இந்தியா அண்ட் பாகிஸ்தான், மற்றும் டி.எப்.காரகாவின் பிட்ரேயல் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்களில் இந்த செங்கோல் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளை மத்திய அரசு கண்டறிந்தது. அதேபோன்று, அண்ணல் அம்பேத்கர் எழுதிய கடிதத்திலும் இந்த செங்கோல் பற்றிய குறிப்புகள் இருப்பதையும் மத்திய அரசு வெளிக் கொண்டு வந்தது.
மேலும், 2021ல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த செங்கோல் நிகழ்வு நினைவு கூறப்பட்டதையும் மத்திய அரசு கண்டறிந்தது. மேலும், பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய "WhatsApp History” என்ற கட்டுரையும் மத்திய அரசு ஆவணங்களாய் தெரிவித்துளளது.
சர்ச்சை எங்கிருந்து வருகிறது?
அதிகாரம் ஒப்படைக்கப்பதன் குறிப்பாகத் தான் செங்கோல் வழங்கப்பட்டது என்று கூறப்படுவதை வராலாற்று ஆசிரியர்களும், அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உதாரணமாக, செங்கோல் குறித்த டைம் இதழில், தமிழ்நாட்டின் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனங்களிடமிருந்து இந்த செங்கோலினை ஜவஹர்லால் நேரு பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், செங்கோல் நிகழ்வு குறித்து அரசு சுட்டிக் காட்டிய புத்தகங்களிலும் அதிகார மாற்றத்திற்கான குறியீடு தான் செங்கோல் என்று சுட்டிக் காட்டப்படவில்லை. செங்கோல் ஒப்படைக்கப்பட்டதன் அந்தத் தருணத்தை தான் சுதந்திர தினமாக நாம் கொண்டாடுகிறோம் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் 2022, 2023ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து செங்கோல் குறித்த நிகழ்வு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஜெயமோகன் எழுதிய 'WhatsApp History' எனும் கட்டுரை உண்மையில் இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கும், செங்கோல் நிகழ்வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் சமூக ஊடங்களில் உலவும் பொய்யான தகவல் என்ற அளவில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் : தமிழர் கலாச்சாரம் பிரதிபலிப்பது பெருமைக்குரியது - அமைச்சர் சேகர் பாபு
இந்த செங்கோல், பின்னர் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, ஜவஹர்லால் நேரு பேசிய அனைத்தும் பொது ஆவணங்களாக உள்ளன. தமிழகத்தில் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக தற்போது செங்கோலினை பிரதமர் பயன்படுத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Parliament, PM Modi