முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.75 நாணயம் பயன்பாட்டுக்கு வருமா? இந்த வெப்சைட்டில் வாங்கிக்கொள்ளலாம்!

ரூ.75 நாணயம் பயன்பாட்டுக்கு வருமா? இந்த வெப்சைட்டில் வாங்கிக்கொள்ளலாம்!

75 ரூபாய் நாணயம்

75 ரூபாய் நாணயம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா மே 28ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நினைவாக சிறப்பு 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நாணயத்தின் எடை 34.65 முதல் 35.35 கிராம் வரை இருக்கும் என நிதி அமைச்சகத்தின் கீழுள்ள பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ரூபாய் நாணயத்தை அரசாங்கம் வெளியிட்டதற்கான காரணம் என்ன?

இந்திய நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு அதன் நினைவாக இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெற்றுள்ளது. இதன் கீழே ‘2023’ என பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அசோக தூணில் உள்ள சிங்க முகம் இடம்பெற்றுள்ளது. இதன் இடதுபுறம் ‘பாரத்’ என்று தேவநகரி எழுத்திலும், வலதுபுறத்தில் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் அடையாளக் குறி ‘₹’ மற்றும் அதன் மதிப்பு ‘75’ என சிங்க முகத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் (ஜிங்க்) என நான்கு உலோகங்களின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பொதுப் பயன்பாட்டிற்கு வெளியிடப்படுமா?

சிறப்பு நினைவு நாணயங்கள் என அழைக்கப்படும் இவை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்படுவதில்லை. இவற்றைப் பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. இதுபோன்ற சிறப்பு நாணயங்களை வெளியிடும் வழக்கம் 1964ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறது. இதுவரை 150 நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Also Read : Video : ஒடிசா ரயில் விபத்து நடந்தது இப்படித்தான்.. தத்ரூப கிராஃபிக்ஸ் காட்சி!

75 ரூபாய் நாணயத்தை எப்படி வாங்குவது? யார் வாங்கலாம்?

யார் வேண்டுமானாலும் இந்த நாணயங்களை வாங்கலாம். www.indiagovtmint.in என்ற அரசாங்க இணையதளத்தின் மூலம் இந்த நாணயத்தை நீங்கள் வாங்கலாம். நேரடியாக பணம் செலுத்தியோ அல்லது செக் மூலமாகவோ இந்த நாணயத்தை வாங்க முடியாது. டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலமாக வாங்கலாம். நீங்கள் 10-க்கும் மேற்பட்ட நாணயங்களை வாங்க வேண்டுமென்றால், அதற்கு உங்களுடைய பான் கார்டு விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

First published:

Tags: Parliament, PM Modi