முகப்பு /செய்தி /இந்தியா / நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படத்திற்கு மரியாதை செலுத்திய பிரதமர்..!

நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படத்திற்கு மரியாதை செலுத்திய பிரதமர்..!

சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மரியாதை

சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மரியாதை

New parliament inaugration | காலை 7.30 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் முதற்கட்ட நிகழ்வு காலை 9.00 மணியளவில் நிறைவடைந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்வுகள் தொடங்கியது.

டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். காலை 7.30 மணியளவில் தொடங்கிய முதற்கட்ட திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நிகழ்ச்சி சர்வமத பூஜையுடன் நிறைவுபெற்றது.

தொடர்ந்து 2-ம் கட்ட நிகழ்வு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி, சாவர்க்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடியை, எம்.பிக்கள் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.

இதையும் படிங்க | புதிய நாடாளுன்ற திறப்பு விழாவில் பிரிஜ் பூஷண் பங்கேற்பதா? - மல்யுத்த வீராங்கனை வினேஷ் ஆவேசம்

இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டதன் பின்னணி குறித்து மக்களவையில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

First published:

Tags: Parliament, PM Modi, Prime minister