வருங்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரும் என்பதால் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது என புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். காலை 7.30 மணியளவில் தொடங்கிய முதற்கட்ட திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சர்வமத பூஜையுடன் நிறைவுபெற்றது.
தொடர்ந்து 2-ம் கட்ட நிகழ்வு 12 மணியளவில் தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற வளாகம் வந்த பிரதமர் மோடி, சாவர்க்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடியை, எம்.பிக்கள் கரஒலி எழுப்பி வரவேற்றனர்.
இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டதன் பின்னணி குறித்து மக்களவையில் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களை துணை சபாநாயகர் இணைந்து தபால் தலை மற்றும் 75வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.75 நாணயத்தையும் மக்களவையில் பிரதமர் மோடி வெளியிட்டார்.
இதையும் படிங்க : நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், “புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க தருணம். நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் உள்ளது. நவீன வசதிகளை கொண்டதாக புதிய நாடாளுமன்றம் திகழ்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், அதிகார மாற்றம் புனிதத்தின் அடையாளமாக செங்கோல் உள்ளது. தமிழ்நாட்டில் 900 ஆண்டுகளுக்கு முன்னரே ஐனநாயக முறை முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆசி வழங்கி செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி. என தெரிவித்தார்.
வருங்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்பதால் புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை எனவும் பிரதமர் மோடி பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parliament, PM Modi