முகப்பு /செய்தி /இந்தியா / தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது ஏன்...? பிரதமர் மோடி

தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது ஏன்...? பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டு, தேசியக் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Gujarat, India

ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காந்தி நகரில் நடைபெற்ற 29ஆவது அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பங்களித்துள்ளார்கள் என தெரிவித்தார்.

மேலும் மாறிவரும் கல்விச் சூழலின் இதயமாக ஆசிரியர்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், குஜராத்தில் 40 சதவீதமாக இருந்த பள்ளி இடைநிற்றல் விகிதம், 3 சதவீதமாக குறைந்துள்ளதற்கு, ஆசிரியர்களே காரணம் என்றார்.

தொடர்ந்து 21-ஆம் நூற்றாண்டில் மாறி வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப, தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு இருக்கும் மாணவர்களே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிய சவால் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Gujarat, New Education Policy, PM Narendra Modi