முகப்பு /செய்தி /இந்தியா / போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்தார்கள்.. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பரபரப்பு புகார்

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்தார்கள்.. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பரபரப்பு புகார்

பிரியங்க் கனூங்கோ

பிரியங்க் கனூங்கோ

மேற்கு வங்கத்தில் ஆய்வுக்காக வருகை தந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ காவல்துறையினர் தன்னை தாக்கியதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • West Bengal, India

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மாநில அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்போக்கை தீவிரப்படுத்தும் விதமாக ஒரு பரபரப்பு சம்பவம் அங்கு நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் மால்டாவில் 6-ம் வகுப்பு மாணவி சமீபத்தில் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ குற்றம்சாட்டினார். தொடர்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு வந்த மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அத்துடன் மேற்கு வங்க போலீசார் தன்னை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை தேசிய ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறியுள்ளார். டில்ஜிலா காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிஸ்வாக் முகர்ஜி தன்னை தாக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். ஆணையத் தலைவரின் இந்த புகார் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் இப்படியா...? இளம்பெண்களுடன் பைக்கில் ஜாலியாய் வீலிங் செய்த இளைஞன்... தீவிரமாய் தேடும் போலீஸ்..!

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், எனவே என்.சி.பி.சி.ஆர் குழு மேற்கு வங்கத்திற்கு வர வேண்டாம் என மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் சுதேஸ்னா ராய், பிரியங்க் கனூங்கோவிற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Police