முகப்பு /செய்தி /இந்தியா / மூன்றாவது அணிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை : நவீன் பட்நாயக் அதிரடி

மூன்றாவது அணிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை : நவீன் பட்நாயக் அதிரடி

நவீன் பட்நாயக் - மோடி

நவீன் பட்நாயக் - மோடி

Odisha Chief Minister Naveen Patnaik | ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் |

  • Last Updated :
  • Gujarat, India

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியுடன் இணைய வாய்ப்பில்லை என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக- காங்கிரசை தவிர்த்துவிட்டு மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்தநிலையில் டெல்லி சென்ற நவீன் பட்நாயக், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்படும் திட்டம் தனக்கு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும் படிக்க... மணிப்பூரில் மீண்டும் மோதல்.. போலீஸ் கமாண்டோ ஒருவர் பலி..!

top videos

    தனித்து போட்டியிடுவது தான் எப்போதும் எங்கள் கொள்கை என்றும் நவீன் பட்நாயக் கூறினார். ஒடிசா முதலமைச்சரின் இந்த முடிவு, தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Gujarat, Naveen Patnaik, Parliament elects