முகப்பு /செய்தி /இந்தியா / கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்...!

கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. உயிரை பணயம் வைத்து கிணற்றில் குடிநீர் எடுக்கும் பெண்கள்...!

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு

Nashik | உயிரை பணயம் வைத்து பெண்கள் தண்ணீர் எடுக்க கிணற்றில் இறங்கும் அவலநிலை மகாராஷ்டிராவில் நிலவி வருகிறது .

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் ஆபத்தான முறையில் கிணற்றில் நீர் இறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை வெயில் தகிக்கும் நிலையில், நாசிக்கில் உள்ள பெயிண்ட் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சரிந்துள்ளதால் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால் கிராமத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடைபயணம் செல்கின்றனர். கிணற்றை சுற்றி நின்று உயிரை பணயம் வைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோ ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

top videos
    First published:

    Tags: Maharashtra, Water