முகப்பு /செய்தி /இந்தியா / மொழி ஒரு தடையாக இருக்காது... 13 மொழிகளில் சி.ஏ.பி.எஃப் தேர்வு நடத்துவது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

மொழி ஒரு தடையாக இருக்காது... 13 மொழிகளில் சி.ஏ.பி.எஃப் தேர்வு நடத்துவது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Narendra modi shares happiness | சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ’இது ஒரு மிக முக்கியமான முடிவு. இது, கனவுகளுடன் இருக்கும் நம் இளைஞர்களுக்கு சிறகுகளைக் கொடுக்கும். ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான எங்கள் பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

top videos
    First published:

    Tags: CRBF, Narendra Modi, PM Modi