பெமினா மிஸ் இந்தியா 2023 நிகழ்வின் இறுதிச் சுற்று ஏப்ரல் 15 மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குமன் லம்பாக் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 59வது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா மிஸ் இந்தியாவாக பட்டம் வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தை டெல்லியை சேர்ந்த ஷ்ரேயா பூஞ்சா, மூன்றாவது இடத்தை மணிப்பூரை சேர்ந்த தவுனோஜம் ஸ்டெரலா பிடித்தார்.
முதல் இடம் பிடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நந்தினி குப்தா, இதற்கு முன்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் முதல் இடம் பிடித்த நந்தினி குப்தா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் 71வது உலக அழகி போட்டியில் இந்தியாவில் சார்பில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manipur