முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய மண்ணில் பிறந்த 4 சிவிங்கிப்புலி குட்டிகள்..!

இந்திய மண்ணில் பிறந்த 4 சிவிங்கிப்புலி குட்டிகள்..!

சிவிங்கிப்புலி குட்டிகள்

சிவிங்கிப்புலி குட்டிகள்

namibia cheetah cub | தற்போது இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி ஒன்று, 4 குட்டிகளை ஈன்றது.

இந்தியாவில் சிவிங்கிப்புலி இனம் அழிந்து விட்டதை அடுத்து, அதனை மீள் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது. அதன் படி, ஆப்ரிக்கா நாடான நமீபியாவில் இருந்து 2 கட்டங்களாக 20 சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன.

அதில், பெண் சிவிங்கிப்புலி ஒன்று, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தது. இந்நிலையில், ஒரு சிவிங்கிப்புலிக்கு 4 குட்டிகள் பிறந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 4 குட்டிகளின் வீடியோவை மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தற்போது இந்தியாவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

First published:

Tags: Baby, Leopard, Tiger