முகப்பு /செய்தி /இந்தியா / என் பிறந்தநாள் பரிசு..! - கர்நாடக முதல்வர் குறித்த கேள்விக்கு டி.கே.சிவகுமார் வைத்த சஸ்பென்ஸ்

என் பிறந்தநாள் பரிசு..! - கர்நாடக முதல்வர் குறித்த கேள்விக்கு டி.கே.சிவகுமார் வைத்த சஸ்பென்ஸ்

டிகே சிவகுமார்

டிகே சிவகுமார்

மேலிடம் எனக்கு என்ன பிறந்தநாள் பரிசு தரப்போகிறது எனத் தெரியவில்லை என டிகே சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற புதிய சஸ்பென்ஸ் கர்நாடக அரசியலை சுற்றி வட்டமிட்டு வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சூத்திரதாரியாக கருதப்படுபவர் டிகே சிவகுமார்.

எனவே, சிவகுமாரை முதலமைச்சராக்க வேண்டும் என இம்முறை அவர் ஆதரவாளர்கள் தரப்பு கங்கனம் கட்டிக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளை, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தரப்பும் சளைக்காமல் தங்கள் பங்கிற்கு மேலிடத்திற்கு அழுத்தம் தந்து வருகின்றன.

அடுத்த முதல்வர் யார் என்று தேர்வு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், தான் டெல்லி செல்லவில்லை என்றும் தனக்கு அதுதொடர்பான அழைப்பு ஏதும் இல்லை என டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று சிவகுமாரின் பிறந்தாள் என்ற நிலையில் கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சிவகுமார், நான் என் தரப்பில் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். மேலிடம் எனக்கு என்ன பிறந்தநாள் பரிசு தரப்போகிறது எனத் தெரியவில்லை.

இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. ரயில் நேரத்தில் வந்தது மாற்றம்..!

top videos

    கர்நாடகா மக்கள் காங்கிரஸ் வெற்றியை பரிசாக தந்துள்ளனர். எனது பிறந்தநாளில் நான் மக்கள் பலரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். வீட்டிலும் பல சடங்குகள் செய்யப்போகிறேன் என்றார். பிறந்தாளில் கட்சி மூத்த தலைவர்கள் மத்தியில் கேக் வெட்டும் புகைப்படத்தையும் சிவகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Congress party, DK Shivakumar, Karnataka Election 2023