முகப்பு /செய்தி /இந்தியா / "முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது" மத்திய நீர் ஆணையம்!

"முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது" மத்திய நீர் ஆணையம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Mullai periyaru dam | முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் திருப்திகரமாக உள்ளது - மத்திய நீர் ஆணையம்.

  • Last Updated :
  • Kerala, India

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

முல்லைப்பெரியாறு தொடர்பான வழக்கில், மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.அதில், இரு மாநில நலன் கருதி, முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசுக்கு அனுமதியும், ஒத்துழைப்பும் வழங்க கேரள அரசுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அணை பிரச்னையில் சுமூகமாக பேசித் தீர்வு காண வேண்டும் என்று இரு மாநில அரசுக்கும் முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழு தலைவர் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

top videos

    இந்நிலையில், மார்ச் 28ஆம் தேதி அடுத்த கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் திருப்திகரமாக உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    First published: