முகப்பு /செய்தி /இந்தியா / மருமகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மாமியார்... மத்திய பிரதேசத்தில் கொடூரம்..!

மருமகளை நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மாமியார்... மத்திய பிரதேசத்தில் கொடூரம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்தியப் பிரதேசத்தில் மாமியார் தனது மருமகளைக் கொடூரமாக சித்தரவதைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Madhya Pradesh, India

 குடும்ப தகராறில் மாமியார் மருமகளை காய்ச்சிய இரும்பு கம்பியால் அந்தரங்க உறுப்பில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு,  சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி சில மாதங்களிலேயே  வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்துள்ளார். தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்துவைத்தும் சண்டை  தீரவில்லை என்று கூறப்படுகிறது.

தினமும் சண்டை சச்சரவுகளால் விரக்தியடைந்த அந்தப் பெண், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல்  தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தனது மனைவியை காணவில்லை என கணவர் உலர் செவானியா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மனைவி அவரது தாய் வீட்டில் இருப்பதை அறிந்த மாமியாரும், மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் சென்று சமாதானமாக பேசியுள்ளனர். கணவருடன் இனிமேல் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்வதாக மாமியார் கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து அந்தப் பெண்ணை ஒரு நாள் முழுவதும் அறை ஒன்றில்  அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை சித்திரவதை செய்ய அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

Also Read : கர்நாடக சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு... ராமர், கிருஷ்ணர் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்த பாஜக எம்.எல்.ஏ.க்கள்..!

top videos

    பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூடி அறையைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து , துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    First published:

    Tags: Crime News, Madhya pradesh